பாதை மறந்து போன பாதை

செதுக்கிய சதுரங்கக் கடலில்
ஓட்டைத் தோணிகள்
கடலை விமர்சனப் படுத்தும் ....

பாதசாரிகள் நடக்கும் ரோட்டில்
பார்த்த சாரத்திகளின்
மாராப்பு சேலைக்குள்
மறுபடியும் தோன்றி வருவார்
யவனராணி எழுதிய சாண்டில்யன்.

இனி இங்கிருப்பது உசிதமில்லை என்று
பல செந்தமிழ்க் கடல்கள்
புது வேடந்தாங்கல் நோக்கிப் பாயும்.

வானம் நேற்றும் வானவில் காட்டியது ....
நாளையும் காட்டும்....
மழையென்று ஒன்று மண்ணில் விழுந்தால்....

காணாமல் போனவர்கள் பட்டியலில்
கொஞ்சம் கரித்துண்டுகளும்
அதிகம் வேகாத கறித் துண்டுகளும்....

விடாது பெய்த மழையிலும்
அழாது ஓடினான் ஒருவன்
இதற்கென்ன அர்த்தமென்று
அகராதி தேடி.....

அகராதி எழுதப்போகிறவனோ
அயர்ந்து தூங்கினான்
தாயின் கர்ப்பப் பையில்......

எழுதியவர் : சுசீந்திரன். (15-Jun-15, 3:56 pm)
பார்வை : 132

மேலே