கதறல்

சிறகு விரித்திடும் முன்னே-என்
என் இறகுகளை முறித்தெறிந்தீர்கள்........
நான் பெண்மையை உணர்ந்திடும் கணமே
என்னைக் களை எடுத்தீர்கள்.............
புத்தகம் சுமந்து புன்னகையுடன்
வலம் வந்த என்னை-புதருக்குள்
புண்ணாக்கிப் புதைத்தீர்கள்..............
மலர்ந்திடும் முன்னே-என்னை
மண்ணாக்கினீர்கள்.............

ஆயிரம் தோட்டாக்கள் கொண்டு,
துளைத்திருக்கலாம்-என்னை
நூறு கத்திகளால் அறுத்தெரிந்திருக்கலாம்,
லட்சம் அம்புகளால் சல்லடையாக்கியிருக்கலாம்,
என்னுடலை...........
ஏன் சபிக்கப்பட்டவளாக்கினீர்கள்......????????
இறந்தும்,, ஊடகங்களில் தினம்,
தினம் இறக்காத நான்............
என் மரணமே!!தலைப்புச் செய்தியாகும்
என்றால்,,பிறந்திருக்க மாட்டேன்
பெண்ணாய்................
உங்களுக்கும் ஓர் பெண்
தாயாய்........
தமக்கையாய்.....
பிறக்கவில்லையா...?????????????

ஆயிரம் முறை தூக்கிலிட்டாலும்!
போதாது உங்களை!!!
உங்கள் உடல்களைப் புதைக்க,
மண்ணே மறுதலிக்க வேண்டும்.....
நெருப்பே நிராகரிக்க வேண்டும்.....
இது என் நீதிமன்றத்தில் உங்களுக்கான
தண்டணை.............

-ருஷானா-

எழுதியவர் : ருஷானா (15-Jun-15, 10:15 pm)
Tanglish : katharal
பார்வை : 63

மேலே