என் இதயம் பேசுகிறது

உன் விழிகளில் என் பிம்பம்
அதை நோக்கினால் தீருமே என் துன்பம்
விழி இரண்டும் வீணையாம்
இமைகலெல்லாம் மீட்டிடும் கம்பிகளாய்

உன் மூச்சிக்காற்றை முகர்ந்து கொள்ள
மூளையை மூங்கிலில் புதைப்பேன்
என் விழி என்னும் அணைக்கட்டு உடைந்தாலும்
அதை அடைத்திடும் கருவியாய் உன் கைகள்

என் இதயத்திலும் உன் பாதச்சுவடுகள்
இமைப்பொழுதும் மறவாமல் உன்னை
இசைத்திடும் பறவையாய் மீட்டினேன் என்னை
காலங்கள் சேர்க்கும் நம்மை !!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (15-Jun-15, 11:02 pm)
சேர்த்தது : r.mohanasundari
பார்வை : 135

மேலே