r.mohanasundari - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : r.mohanasundari |
இடம் | : panruti |
பிறந்த தேதி | : 29-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 1033 |
புள்ளி | : 196 |
கவிதை எழுதுவது என் உயிர் மூச்சு...
என் உணர்வுகளை புரிந்த
என் மனதினை அறிந்த
என் மகிழ்ச்சிக்கு சொந்தமாக
இந்த உலகில் ஓர் பந்தமாக
என் நம்பிக்கையின் சின்னமாக
ஒரு ஆண் இந்த பிரபஞ்சத்தில்
உண்டெனில் அது என் - தந்தை
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா !!
என் உணர்வுகளை புரிந்த
என் மனதினை அறிந்த
என் மகிழ்ச்சிக்கு சொந்தமாக
இந்த உலகில் ஓர் பந்தமாக
என் நம்பிக்கையின் சின்னமாக
ஒரு ஆண் இந்த பிரபஞ்சத்தில்
உண்டெனில் அது என் - தந்தை
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா !!
விவசாயம் .......
மண்ணோடு மனிதன் எழுதிய
முதல் கவிதை ...
பூமி அணியும்
புதுப்புதுப் புடவை .....
மழையில் ஊறினால்
சாயம் ஏறும் ஓவியம் .....
இறுதியாக இந்தியாவின்
ஒடிந்த முதுகெலும்பு ....
ஆம், ஒடிந்த முதுகெலும்புதான்...
முதுகெலும்பை விற்றுத்தானே
மூலிகை மருந்து வாங்கினாய் ...
அமைச்சர்களின் ஆண்மைக்கு .
@
பத்திரிக்கையில் படித்தேன்
"தொடரும் விவசாயிகள் தற்கொலை "
புள்ளி விவரம்
புத்திக்குள் கேள்விக்குறியானது ...
இது எதிர்ப்பா
தென்னங்கீற்றுகள் - தன்
தேகம் தேயத் தேய
தெம்மாங்கு பாடின...
@
பாடலுக்கு ஆடுவதாய்
காற்று கைகோர்த்து
வளைந்து வளைந்து
வலம் வந்தது ....
@
கார் வண்ண முகில்
பால் வண்ண நிலவுக்கு
பாய்விரித்து படுத்திருந்தது ...
@
நட்சத்திரங்களும் - என்
நாயகியைப் போல்
பாதி தூங்கி
மீதி ஏங்கி
தனித்திருந்தன ...
@
மொட்டை மாடியில்
அந்த காதலர்கள்
என்ன நெருக்கம்
நத்தையும் கூட்டையும் போல...
@
அந்த தாய்
படுத்திருந்த நிலவைக்காட்டி
படுக்கவிருக்கும் குழந்தைக்கு
பாலூட்டினாள்...
@
பண்ணைத்தெருவில்
திண்ணைக்கு தான்
பனிப்பூவே மொழிப்பேசு
இப்பூமி சுற்றுவது எப்படி
கடல் அலையே நுரைப்போடு
இந்தக்காற்று வீசுவது எப்படி
வான் பறவைகளே வட்டம் போடு
இந்த நிலவை நட்டது யாரு
விண்மீன்களே தூரிகை வீசு
கதிரவனிடம் மறைய சொன்னது யாரு
குருவிகளே கொஞ்சம் நில்லு
இந்த கூட்டை கட்டச்சொன்னது யாரு
மயில்களே கொஞ்சம் நில்லு
இந்த வானவில்லை வரைந்தது யாரு
இசைகளே என்னை பாரு
சங்கீத ஞானம் தந்தது யாரு
சுவைகளே என்னை பாரு
பண்டங்களில் உன்னை புகுத்தியது யாரு
குயில்களே இங்கு ஓடி வா
என் இளமையை தேடி தா
வான்முகிலே இங்கு இறங்கி வா
உன் பால்முகத்தை எனக்கு தா
தென்றலே என்பக்கம் வீசு
சிங்கார கதை ஒன்று பேசு
எண்
உங்கள் கனவு நபர்
உங்களது கணவனாகாமல் போகலாம்
ஆனால்
உங்கள் கணவனாக போகும் நபர்
உங்களது கனவுகளை நிறைவேற்றலாம் !!
பனிப்பூவே மொழிப்பேசு
இப்பூமி சுற்றுவது எப்படி
கடல் அலையே நுரைப்போடு
இந்தக்காற்று வீசுவது எப்படி
வான் பறவைகளே வட்டம் போடு
இந்த நிலவை நட்டது யாரு
விண்மீன்களே தூரிகை வீசு
கதிரவனிடம் மறைய சொன்னது யாரு
குருவிகளே கொஞ்சம் நில்லு
இந்த கூட்டை கட்டச்சொன்னது யாரு
மயில்களே கொஞ்சம் நில்லு
இந்த வானவில்லை வரைந்தது யாரு
இசைகளே என்னை பாரு
சங்கீத ஞானம் தந்தது யாரு
சுவைகளே என்னை பாரு
பண்டங்களில் உன்னை புகுத்தியது யாரு
குயில்களே இங்கு ஓடி வா
என் இளமையை தேடி தா
வான்முகிலே இங்கு இறங்கி வா
உன் பால்முகத்தை எனக்கு தா
தென்றலே என்பக்கம் வீசு
சிங்கார கதை ஒன்று பேசு
எண்
உன் விழிகளில் என் பிம்பம்
அதை நோக்கினால் தீருமே என் துன்பம்
விழி இரண்டும் வீணையாம்
இமைகலெல்லாம் மீட்டிடும் கம்பிகளாய்
உன் மூச்சிக்காற்றை முகர்ந்து கொள்ள
மூளையை மூங்கிலில் புதைப்பேன்
என் விழி என்னும் அணைக்கட்டு உடைந்தாலும்
அதை அடைத்திடும் கருவியாய் உன் கைகள்
என் இதயத்திலும் உன் பாதச்சுவடுகள்
இமைப்பொழுதும் மறவாமல் உன்னை
இசைத்திடும் பறவையாய் மீட்டினேன் என்னை
காலங்கள் சேர்க்கும் நம்மை !!