KathirStalin - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : KathirStalin |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-Oct-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 38 |
Hardware Engineer
புது வாழ்வு தேடி
புறப்பட்ட புரட்சியே !
புது தில்லி நோக்கி
புறப்பட்ட எழுச்சியே !
அகிம்சை வழியில்
அமைதி போராட்டம்
அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை
அனு தினமும் அன்னமில்லை
உடல் மெலிந்தது நித்தம்
உயிர் வாழ்வது துச்சம் என்று எண்ணி
அணுகுண்டாய் முளைத்தது
அங்கே அக்கினி குஞ்சுகள்
பாம்பு எலி கடித்து
பட்டினி போராட்டம்
பாதி தலைமுடி பாதி மீசை எடுத்து
பகுத்தறிவாளர்கள் போராட்டம்
கண்டுகொள்ளவில்லை அரசாங்கம்
நிலைகுலைந்தார்கள் நினைவிழந்தார்கள்
நிர்வாணமாய் போராட்டம்
சிந்தனையாளர்கள் மூளை சிறுபுத்தியானது
சிறுநீர் குடித்து போராட்டம்
உன்னை நானும்
என்னை நீயும்
யாரென்று அறியாத போதும்
அகிலத்தில் நடக்கும்
அத்தனை விஷயங்களையும்
அன்பாய் பகிர்ந்து கொள்ளும்
அழகான பயணம் !
தென்னங்கீற்றுகள் - தன்
தேகம் தேயத் தேய
தெம்மாங்கு பாடின...
@
பாடலுக்கு ஆடுவதாய்
காற்று கைகோர்த்து
வளைந்து வளைந்து
வலம் வந்தது ....
@
கார் வண்ண முகில்
பால் வண்ண நிலவுக்கு
பாய்விரித்து படுத்திருந்தது ...
@
நட்சத்திரங்களும் - என்
நாயகியைப் போல்
பாதி தூங்கி
மீதி ஏங்கி
தனித்திருந்தன ...
@
மொட்டை மாடியில்
அந்த காதலர்கள்
என்ன நெருக்கம்
நத்தையும் கூட்டையும் போல...
@
அந்த தாய்
படுத்திருந்த நிலவைக்காட்டி
படுக்கவிருக்கும் குழந்தைக்கு
பாலூட்டினாள்...
@
பண்ணைத்தெருவில்
திண்ணைக்கு தான்
பிழைக்க இடம் தேடி
வந்தவர்களை சாகடித்தது
மழை மனிதனோடு சேர்ந்து
ஈரமே இல்லாமல்.....!!!
கவிதாயினி நிலாபாரதி
உயர்ந்தோர்- தாழ்ந்தோர்
முதியோர்- இளையோர்
என்ற பாகுபாடின்றி
சமத்துவம்- சகோதரத்துவம்
போற்றி பேசுபவர்கள்
அனைவரும் என்னிடம் தான் !
இப்படிக்கு
மதுபானக்கடை...!
பெண்ணே !
எத்தனை முறை
உச்சரித்தாலும்
சந்தோசம் தரும்
அழகான கவிதை
உன் பெயர் மட்டும் ...!
பெண்ணே !
ஒவ்வொரு நாளும்
கடவுளிடம் வேண்டி
கொள்கிறேன் -உன்னோடு
நிழலாய் வாழ அல்ல !
நிஜமாய் வாழ !
ஒரு இளைங்கி அல்லது குமரியை எப்படி அழைப்பது