புது வாழ்வு தேடி
![](https://eluthu.com/images/loading.gif)
புது வாழ்வு தேடி
புறப்பட்ட புரட்சியே !
புது தில்லி நோக்கி
புறப்பட்ட எழுச்சியே !
அகிம்சை வழியில்
அமைதி போராட்டம்
அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை
அனு தினமும் அன்னமில்லை
உடல் மெலிந்தது நித்தம்
உயிர் வாழ்வது துச்சம் என்று எண்ணி
அணுகுண்டாய் முளைத்தது
அங்கே அக்கினி குஞ்சுகள்
பாம்பு எலி கடித்து
பட்டினி போராட்டம்
பாதி தலைமுடி பாதி மீசை எடுத்து
பகுத்தறிவாளர்கள் போராட்டம்
கண்டுகொள்ளவில்லை அரசாங்கம்
நிலைகுலைந்தார்கள் நினைவிழந்தார்கள்
நிர்வாணமாய் போராட்டம்
சிந்தனையாளர்கள் மூளை சிறுபுத்தியானது
சிறுநீர் குடித்து போராட்டம்
உலகிற்கே சோறு போட்டவன் தமிழன்
உடலை கூறுபோட நினைக்கும் அரசாங்கம்
தமிழன் என்று சொல்லுவோம்
தலை நிமிர்ந்து வெல்லுவோம் !
தமிழன் உடலை கூறுபோட நினைப்போரை
தரையில் தலை உருள கொய்யுவோம் !