மயக்கும் இயற்கை

பனிப்பூவே மொழிப்பேசு
இப்பூமி சுற்றுவது எப்படி
கடல் அலையே நுரைப்போடு
இந்தக்காற்று வீசுவது எப்படி

வான் பறவைகளே வட்டம் போடு
இந்த நிலவை நட்டது யாரு
விண்மீன்களே தூரிகை வீசு
கதிரவனிடம் மறைய சொன்னது யாரு

குருவிகளே கொஞ்சம் நில்லு
இந்த கூட்டை கட்டச்சொன்னது யாரு
மயில்களே கொஞ்சம் நில்லு
இந்த வானவில்லை வரைந்தது யாரு

இசைகளே என்னை பாரு
சங்கீத ஞானம் தந்தது யாரு
சுவைகளே என்னை பாரு
பண்டங்களில் உன்னை புகுத்தியது யாரு

குயில்களே இங்கு ஓடி வா
என் இளமையை தேடி தா
வான்முகிலே இங்கு இறங்கி வா
உன் பால்முகத்தை எனக்கு தா

தென்றலே என்பக்கம் வீசு
சிங்கார கதை ஒன்று பேசு
எண்ணில்லா எம் இயற்கையிடம்
எந்தன் எழுத்துக்களும் இலயிக்கின்றன

கவி எழுத காகிதத்தை எடுத்தேன்
கற்பனைகள் வழிந்தோட
கரைந்த மனதிடமிருந்து
கரையாத எழுத்துக்களை வரைத்தேன் !!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (15-Jun-15, 11:21 pm)
Tanglish : mayakkum iyarkai
பார்வை : 278

மேலே