மரமே ஆதாரம் மனமே சேதாரம்

ஆதிமனிதனின் மானம் நீயே
பாதியில் மறந்த மனமானாய்
வாதியின் சூழ்ச்சியில் சாதிகள் குவிந்து
தாதியாய் தனித்து தவித்தாயே!

வனங்களின் இளவரசி
மனங்களின் மலையரசி
சனங்களின் இல்லத்தரசி
கனவான்களின் கற்புக்கரசி

சுனக்கமில்லா காதலினாலே
இணக்கமான து இன்பமழை
மனக்கும் மண்ணின் மகளாகி
வணங்கும் தெய்வ மகளானாய்!

வாதங்கள் நடுவில் சிக்குண்டு
வாதிகள் இடையில் மக்குண்டு
பாதியில் சரிந்தாய் பாதைகள் நடுவே
சாதிகள் தீமூட்டிட சடலமானாய்!

பூத்தது காய்த்தது வீணாகி
சாய்த்தது முறித்தது வேரோடு
பார்த்தது வெறுத்தது பருவமழை
பெய்தது பொய்த்தது உனைகண்டு!

நெடுஞ்சாலை பயணம்
நிழலின்றி தவிப்பு
குடிநீரும் உப்பு
யார்செய்த தப்பு!

இனியேனும் விழித்து
இல்லந்தோறும் மரம் வளர்த்து
இனிமையை நிலைநாட்டு
இல்லையேல் வரும் காலனை எதிர்நோக்கு!

எழுதியவர் : கனகரத்தினம் (16-Jun-15, 1:39 am)
பார்வை : 145

மேலே