செய்ந்நன்றி

..................................................................................................................................................................................................

சிறுவயதில் ஓர் நாள்
சிற்றோடைப் பக்கம் சென்றிருந்த போது
சிறுதூறல் வலுத்து
சிலகணத்தில் பெருமழையாய் சீறி வீழ்ந்ததே...

கட்டைவிரல் உயரத்தில்
கண் விழித்து நிலம் ஊன்றிய சிறு மாந்தளிர்
எப்படிப் பிழைப்பதென
இருமருங்கு தள்ளாட, இரக்கம் கொண்டேன்.

எட்ட இருந்ததொரு
வட்டக்கண் கொட்டாங் குச்சி எடுத்து
பட்டுத்துளிர் மேல் மூடினேன்.
பல வருடம் கடந்தது - பரபரப்பில் மறந்தேன்.

அதே இடம் சேர்ந்தேன்...
ஆகாயம் தழுவி நிற்கும் அழகுமரம் கண்டேன்..
இதோ ஓர் அதிசயம் ! ! ! ! !
எனைப் பார்த்து மாமரம் நன்றியுரை சொன்னதே...

பருத்த அடிமரத்தில்
பாதியாய்ப் பிளந்த கொட்டாங் குச்சி ! ! ! ! !
மரத்தோடு மரமாகி
மறவாமல் செய்ந்நன்றி மகிழ்ந்து ரைக்கின்றதே ! ! ! ! !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Jun-15, 5:05 pm)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே