வனப்பில் வீழ்ந்தேன்

வெண்ணிலவு வானத்தில் வளையவரும் அழகினை,நான்
***வியந்து பார்த்தேன்
கண்சிமிட்டும் தாரகைகள் புடைசூழச் செல்பவளைக்
***கள்ளி என்றேன்
தண்ணிலவு சிந்தொளியில் முகிலினமும் மௌனமுடன்
***தவழக் கண்டேன்
வண்ணவண்ணச் சித்திரங்கள் அழித்தழித்துத் தீட்டுகின்ற
***வனப்பில் வீழ்ந்தேன் !!