நீ எதுக்கய்யா தேர்தலிலெ போட்டியிடற
ஏய்யா நீ எதுக்கய்யா தேர்தலிலே போட்டியிடறெ?
ஏன் மத்தவங்கெல்லாம் எதுக்குப் போட்டியிடறாங்க?
அவுங்க எல்லாம் படிச்சவங்கய்யா.
நான் கைநாட்டுத் தான். வாக்குரிமை எனக்கு இருக்குதில்ல. படிக்காதவன் தேர்தலிலே நிக்கக் கூடதுன்னு சட்டமா?
சரி நீ ஜெயிக்கறன்னு வச்சுக்க. சட்டமன்றத்துக்குப் போய் என்ன சாதிக்கப் போறே?
நெறையப் பேர் என்ன செய்யறாங்களோ அதத் தான் நானும் செய்வேன்.
அப்பிடின்னா?
மேசையைத் தட்டுவேன்.