உம்மால் முடிந்தால் பதில் கூறவும் வாசகரே - உதயா

வணக்கம் தோழர்களே / தோழிகளே ...

ஆழ்ந்து சிந்தித்து கதையினை உணர்ந்து கதையில் கேட்டப்படும் கேள்விக்கு பதில் அளிக்கவும் .

சரி கதைக்குள் செல்வோம் .

பாக்கியம் அதுர்ஷ்டம் என்பது என்ன என்று அனைவருக்கு தெரிந்த ஒன்றே .

உண்மையிலே பாக்கியம் என்பது பாக்கிய நாதம் அது ஒரு கடவுள். அதே போல் அதிர்ஷ்டம் என்பது லட்சுமி தேவியின் மறுபெயர்.

ஒரு நாள் பாக்கிய நாதனுக்கும் லட்சுமி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது .யார் பெரியவர் என்று .

நமக்கு தெரியாதா எதுவாக எதுவாக இருந்தாலும் பெண்களுக்கே முதல் உரிமை என்று .

லட்சுமி தேவியார் ஒரு பொன் குடத்தில் செல்வங்களை நிறைத்து பூலோகத்தில் ஓரிடத்தில் புதைத்து வைத்து விட்டாள். அவள் புதைத்து வைத்த இடம் அந்தணர்க்கு சொந்தமானது .

அந்த அந்தணர் அவ்விடத்தை ஒரு விவசாயிக்கு விற்றுவிட்டார். நம் முன்னோர்களின் வழக்கு படி வீடு கட்டினாலோ, புது இடம் வாங்கினாலோ யாகம் வளர்த்து கலசம் ஜோடித்து கோமாதாவை அழைத்து பூஜை முடிந்தவுடன் ஜோடித்த கலசத்தினை மனில் புதைத்து விடுவார்கள் .

அவ்வாறு கலசத்தை புதைக்க அந்த விவசாயி மண்ணை தோன்றும் போது லட்சுமி தேவியாரால் புதைக்கப்பட்ட செல்வம் கிடைத்தது. அந்த விவசாயியின் மனைவி நாம் கொடுத்து வைத்தவர்கள்.நமக்கு செல்வம் கிடைத்து உள்ளது என சொன்னாள்.

ஆனால் அந்த விவசாயியோ இது நமக்கு சொந்தமானது அல்ல. இவ்விடத்தை நமக்கு விற்று சென்ற அந்த அந்தணர்க்கே இது சொந்தமென கூறி அச்செல்வத்தை எடுத்துக் கொண்டு அந்தணரை தேடி சென்றார் அந்த விவசாயி .

எங்கு தேடினும் அந்தணர் கண்ணில் தென்படவில்லை. களைப்படைந்த விவசாயி ஓர் இடத்தில் அமர்ந்தார். சற்று நேரத்திலே கோவில் மணி ஓசை ஒலித்தது . மணியோசை பயணம் செய்து வந்த திசையினை விவசாயி திரும்பி பார்த்தார். கோவிலில் இருந்து அந்தணர் இறங்கி வருவது விவசாயியின் கண்ணில் பட்டது.

செல்வத்தை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிக்கொண்டே அந்தணரே அந்தணரே என்று அழைக்க அந்தணர் திரும்பி பார்த்தார். நடந்த விபரத்தை தெளிவாக சொன்னார் விவசாயி. அந்த அந்தணர் செல்வத்தை ஏற்க மறுத்து விட்டார் . விவசாயி நான் உங்களுக்கு மனை விற்றேன் அல்லவா . ஆகையால் மண்ணும் உமக்கே சொந்தம் மண்ணில் உள்ள பொருளும் உமக்கே சொந்தம். விவசாயியும் அந்தணரும் செல்வத்தை ஏற்க மறுத்துவிட்டனர் .

இதற்கான தீர்வை தேடி அவர்கள் அந்நாட்டை ஆளும் மன்னரிடம் சென்றனர். இருவரும் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். மன்னர் ஒரு மாதம் அவகாசம் கேட்டார். அதுவரை செல்வத்தை மந்திரி பாதுகாப்பார். மந்திரி அந்த செல்வத்தை எடுத்து சென்று ஒரு பெட்டியினுள் வைத்துவிட்டு நான்கு காவலாளியை காவல் வைத்தார் .

ஒரு நாள் விவசாயி நிலத்தினை உழுது கொண்டிருந்தார். அன்றோ என்றும் இல்லாத அளவிற்கு கதிரவின் தாக்கம் அதிமாய் இருந்தது. விவசாயிக்கு மனதில் சில எண்ணங்கள் ஓட தொடங்கின. அந்த செல்வத்தை நாமே வைத்து இருந்தால் இவ்வாறு கஷ்டப்படும் நிலைமை நமக்கு வந்து இருக்குமா என்று .

விவசாயி வேகமாக விரைந்து அந்த மந்திரியை காண சென்றார். மந்திரியாரே அவ்விடத்தை நான் அந்த அந்தணரிடம் இருந்து வாங்கி விட்டேன். ஆதலால் மண்ணும் மண்ணுக்குள் இருந்த அச்செல்வமும் எமக்கு உரியது என உரைத்துக் கொண்டிருக்கும் போது அந்தணரும் அவ்விடத்திற்கு வந்து விட்டார் . அது எம் மூதோரின் சொத்து எமக்கு உரியது என அவரும் உரைத்தார்.

இருவரும் சற்று அமைதியடையுங்கள் இன்றுதான் இறுதி நாள் மன்னர் தீர்ப்பு வழங்குவார் வாருங்கள் மன்னரை காண செல்லலாம் என மந்திரி உரைத்தார். இருவரும் செல்வம் தங்களுக்கே உரியது என வாதத்தை முன்வைத்தனர். ஆனால் மன்னரோ? " மண்ணில் கிடைத்த எந்த ஒரு பொருளும் மன்னனுக்கே சொந்தம் " என தீர்ப்பு வழங்கினார். அதோடு செல்வத்தை அரசு கஜானாவில் சேர்த்துவிடும் படி மந்திரிக்கு ஆணையிட்டார்.

மந்திரி செல்வத்தை எடுக்க சென்றார். அங்கு அவர் வைத்த செல்வம் காணவில்லை. அச்செல்வத்தை காவல் இருந்த நான்கு நபரும் செல்வத்தை களவாடி சென்று விட்டனர். ஓர் அடர்ந்த கானகத்தில் ஓர் மரத்தில் அடியில் அமர்ந்து செல்வத்தை பங்குயிட்டனர்.

அந்த நான்கு கள்வரில் ஒருவன் உரைத்தான் இன்று முதல் நாம் நால்வரும் மிகுந்த செல்வர்கள் என்று . மற்றொருவன் உரைத்தான் இந்நாளை கொண்டாடியே ஆகவேண்டும் என்று . மற்றொருவன் எவ்வாறு கொண்டாடுவது என்று . மற்றொருவன் நீங்கள் இருவரும் செல்வத்திற்கு காவல் இருங்கள். நாங்கள் இருவரும் சென்று இனிப்பு வாங்கி வருகிறோம் என்று .சரி அப்படியே ஆகட்டும் நீங்கள் இருவரும் செல்லுங்கள் நாங்கள் இருவரும் காவல் இருக்கிறான் என்று இருவர் கூற இருவர் சென்றனர்.

இருவரும் இனிப்பு கடையினை நெருங்கி இனிப்பு வாங்க தொடங்கினர். அவ்விருவரின் ஒருவன் அவர்களை எப்படியாவது தீர்த்துகட்டிவிட்டால் செல்வம் முழுவதும் இரண்டே பங்குதான் என்று மெதுவாக காதோரத்தில் உரைத்தான். சரி யோசனை நன்றாகத்தான் உள்ளது அவர்களை எவ்வாறு தீர்த்துக்கட்டுவது ? என்று மற்றொருவன் கேட்டான் .

அந்த நேரம் பார்த்து அத்தெருவின் வழியே எலிமருந்துகளை ஒருவன் கூவிக்கொண்டெ சென்றான். இனிப்பை வாங்கிக் கொண்டு எலிமருந்து விற்பவனை நெருங்கி எலிமருந்தையும் வாங்கினர். அந்த எலிமருந்து விற்பனையாளன் ஐயா இது மிகவும் கொடிய விஷம் வாய்ந்தது தெரியாமல் ஒரு துளி மனிதர்கள் உண்டுவிட்டால் அடுத்த கணமே மரணம் உறுதிதான் என்று அவ்விருவரிடமும் உரைத்தான்.
இருவரும் வாங்கிய எலிமருந்தை இனிப்பில் கலந்துவிட்டு மற்ற இருவரை நோக்கி சென்றனர் .

இவர்கள் செல்ல தாமதம் நேர்ந்ததால் செல்வத்திற்கு காவல் இருந்த இருவரும் அவர்கள் மன்னனில் காவலர்களால் கைது செய்யப்பட்டு இருப்பார்களோ என்று வினவ தொடங்கினர். இனிப்பு வாங்கிய இருவரும் காவல் இருந்த இருவருக்கும் இனிப்பி கொடுத்து உண்ணுமாறு பணித்தனர். உங்களுக்கு வேண்டாமா என்று அவர்கள் விருந்தோம்ப இல்லை இல்லை நாங்கள் நிறைய உண்டுவிட்டோம் நீங்கள் உண்ணுங்கள் என்று மறுபடியும் பணித்தனர் .

அவ்விருவரும் இனிப்பினை கிழே வைத்து விட்டு அவர்கள் மறைத்து வைத்திருந்த வாளால் மற்ற இருவரையும் கொன்றுவிட்டனர். தற்போது மீதமிருப்பதோ இருவர் மட்டுமே அதில் ஒருவன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இனிப்பும் நமக்கே செல்வமும் நமக்கே சரி முதலில் இனிப்பை உன்போம்யென இருவரும் இனிப்பை உண்டனர் . இருவரும் மாய்ந்து விட்டனர் செல்வம் அனாதையாய் நின்றது.

சரி கதை உங்களுக்கு புரிந்தி இருக்கும் என நினைக்கிறேன் .

அதிர்ஷ்டம் என்பது என்ன .

ஒரு அறிய பொருள் ஒருவருக்கு கிடைத்தால் அது அதிர்ஷ்டம். ஆனால் இங்கோ அது பலருக்கு கிடைத்தது விட்டது அப்போது நிச்சயம் அதிர்ஷ்டம் பெரிதல்ல அதாவது லட்சுமி தேவியார் பெரியவர் அல்ல .

சரி அப்படியென்றால் பாக்கியம் என்பது என்ன

கிடைக்கப்பட்டவையை கிடைக்கப் பெற்றவர் அனுபவித்தால் அது பாக்கியம். ஆனால் இங்கோ யாரும் செல்வத்தை அனுபவிக்கவில்லை அதாவது பாக்கிய நாதனும் பெரியவர் அல்ல .

அப்படியென்றால் இந்த கதையில் யார்தான் பெரியவர் ?

வாசகரே உம்மால் முடிந்தால் பதிலளிக்கவும் .. நான் இதற்கான விடையை வரும் 25-6-2015 ம் நாள் அன்று கூறுகிறேன்.

எழுதியவர் : udayakumar (16-Jun-15, 3:17 pm)
பார்வை : 381

மேலே