நீதானடி என் வாழ்வு நிலைத்திருக்கும்வரை 555
![](https://eluthu.com/images/loading.gif)
உயிரே...
உண்மை அன்பினை பிரிவில்தான்
உணர முடியும் என்கிறார்கள்...
என்னை நீ பிரிந்திருக்கும்
இந்த நாட்களில் கூடவா...
என் அன்பினை நீ
உணரவில்லை...
உனக்காக நான் கண்ணீர்
சிந்துகிறேன்...
நீ எனகாகவாவது
ஒரு புன்னகை சிந்தேன்...
உன்னை நான் காணும்
அந்த நிமிடத்தில்...
நீ கொஞ்சம் சிரித்தாலும் நான் சந்தோசம்
கொள்வதோ எல்லை இல்லையடி...
உனக்காக என் கால விரயத்தை
கடிகாரம் மட்டுமே கண்டு கொள்கிறது...
ஒரேயொரு புன்னகை
கொடு...
நான் உன்னை
பார்காதபோதாவது...
உன் புன்னகையின்
வாசம் போதுமடி எனக்கு...
என் வாழ்வு
மண்ணில் நிலைத்திருக்கும்வரை.....