நீயும் நானும் யாரோ
நீயும் நானும் யாரோ ....??
எத்தனையோ நாட்கள்
எண்ணங்கள் சிறகடிக்க
சிட்டாய் பறந்திருந்தோம்
சிங்காரமாய் உலா வந்தோம்
சின்ன சின்ன சந்தோஷத்தில்
சிரிப்புடனே வாழ்ந்திருந்தோம்
உன் நினைவுகள் மட்டும்
வழி துணையாய்
உன் பார்வை மட்டும்
புத்துணர்வாய்
புரட்டி போட்டாது காலம்
சில பல காரணங்களால்
சின்ன சின்ன பூசலினால்
அறியா வயது ஈகோ வினால்
இன்று
நீயும் நானும் யாரோ
நினைவில் மட்டும் வாழ
கற்றது நன்று
நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும்
நினைவில் மட்டுமே நீ
சிவ.ஜெயஸ்ரீ