அப்பா

தொப்புள்கொடி உறவு என்று
தொடர்கதை அமைத்தேன்
எல்லாம் பொய்யானது
என் கனவு இல்லத்தில்.................


நானோ.......................
பத்து வயதில் பனை ஏறினேன்
பக்குவம் பார்த்து தரை இறங்கினேன்
பழகி விட்டது
செம்மண் காடும் செம்மண் புழுதியும்...

பணையேறும் பொது கால் சறுக்கினால்
வாழ்க்கை சறுக்கி விடுமோ என்று
இரத்த கறை பார்க்காமல்
இறங்கிய காலம் ஒரு நாளும் கிடையாது....

பட்டினி கிடந்ததில்லை-என்
ஆத்தாவிற்க்கு அது அவசியமும் இல்லை
எட்டு புள்ள பெத்தாலும்
எங்கும் கடன் வாங்கியதில்லை
எங்க ஆத்தா.............

என் தகப்பன் என்னிடம் சொன்னது..................

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (17-Jun-15, 4:58 pm)
Tanglish : appa
பார்வை : 71

மேலே