உன்னால் தானடி
காதல் வந்ததும் கவிதை வந்ததும்
உன்னால் தானடி
இதயம் தொலைந்ததும் இளமை மகிழ்ந்ததும்
உன்னால் தானடி
உன்னை கண்ட பின்பு தானே
மனசில் காதல் முளைத்ததடி
காதல் வந்த பின்பு தானே
வார்த்தை கவிதை ஆனதடி
ஒரு முறை உன்னை பார்த்தால்
போதும் இளமை மகிழுதடி
ஒரு முறை உன்னை பிரிந்தால்
போதும் இதயம் வலிக்குதடி
ஒரு கணம் உன்னை நினைத்தால்
போதும் கவிதை மலருதடி
ஒரு கணம் உன்னை மறந்தால்
போதும் கண்ணீர் சுடுகுதடி
எந்தன் பாதை நீயென்று
விழிகள் செல்லுதடி
எந்தன் வாழ்வும் நீயென்று
உயிரும் சொல்லுதடி
காற்றில் உந்தன் சுவாசம்
தொடுத்தேன் ஜீவன் வாழுதடி
கவிதையில் உந்தன் நாமம்
தொடுத்தேன் கானம் பிறந்ததடி
பூக்களில் உந்தன் புன்னகை
கண்டேன் விழிகள் காவலடி
மனசினில் உந்தன் நினைவுகள்
புதைத்தேன் ஆயுள் கூடுதடி
எந்தன் பாதை நீயென்று
விழிகள் செல்லுதடி
எந்தன் வாழ்வும் நீயென்று
உயிரும் சொல்லுதடி