அவனும் அவளும்

முதன்முதலாய் சந்தித்த
பேருந்து நிலையம்
முதன்முதலாய் தரிசித்த
சிவா விஸ்ணு கோவில்
முதன்முதலாய் சென்ற
காபி ஷாப்
அனைத்தையும்
என்னையும்
உன்னையும்
காதலையும்
கவிதையாக்க நினைத்து
வரவில்லையென
கசக்கிவிட்டிருந்த
தாளில்
காதலித்து கொண்டிருந்தனர்
உன்னைப்போல் ஒருத்தியும்
என்னைப்போல் ஒருவனும்.

எழுதியவர் : தர்மராஜ் (18-Jun-15, 8:41 pm)
Tanglish : avanum avalum
பார்வை : 109

மேலே