விவசாயம்

சும்மா வருமா சோறு
மண்ணும் விண்ணும்
தந்து விட்ட நிலமும் நீரும்
நமக்கு அள்ளித் தரும் செல்வம் விவசாயம்

மண்ணும் நீரும் இருந்து விட்டால் போதுமா/
வித்திடும் விவசாயி வேண்டுமல்லவா
வித்து மட்டும் விதைத்து விட்டால் போதுமா
உழைப்பு வேண்டும் விடா முயற்சி வேண்டும்

விட்டுக் கொடுப்பானா விவசாயி
தான் போட்ட விதை அனைத்தும்
சிலு சிலு என்று கொத்து கொத்தாய்
சிரம் கனக்கும் சிறப்பைக் காண
சிரத்தையுடன் உழைத்திடுவான்

விலை உயர்ந்த பயனாகும்
விதைத்திட்ட விதை அனைத்தும்
விரைந்து பயன் கொடுக்க
வீணாகும் அவன் வியர்வை விலையாகும்.
கதிராகும் நெல்லு மணியாகும்
மணி மணியாய்க் கதிர்கள் கொத்துக்கொத்தாய்
பயன் தருமே

அவன் பாடறியும் உழைப்பறியும் ஊரறியும் உலகறியும்
உண்ணுகின்ற நாம் அறிவோம்
இறைவன் படைப்பில் மனிதன்
மனிதன் படைப்பில் விவசாயம்
இறைவன் படைத்த உயிர்கள் எல்லாம்
மனிதன் படைப்பில் வாழுகின்றன

விவசாயம் நாம் தேடும் ஆதாயம்
வீறு கொண்டு நடை போட்டால்
தோல்வி இல்லை சோர்வு இல்லை
பஞ்சம் இல்லை பசி இல்லை
வெறுமை இல்லா இறுமாப்பு
வித்திடுமே நற்சுகத்தை விவசாயத்தால்

எழுதியவர் : பாத்திமா மலர் (19-Jun-15, 10:07 am)
Tanglish : vivasaayam
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே