இன்பமுடன் மங்கா வாழ்வே ---- அறுசீர் விருத்தம்

அழிந்திடும் அழகினையும் கண்டவர்கள்
----- இயல்பான அன்பை நோக்கி
வழிந்தோடி வருவார்கள் முற்றிலுமாய்
-----மண்ணுலகில் வரமாய் நின்று
பொழிந்திடும் மாரியினைப் போன்றதொரு
------ வளமான பொழிவு தன்னில்
மகிழ்ந்திடும் மனிதமனம் மட்டில்லா
----- இன்பமுடன் மங்கா வாழ்வே ..!

( காய் + காய் + காய்
காய் + மா + தேமா )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jun-15, 4:52 pm)
பார்வை : 60

மேலே