உறவுகள்

உ ற வு க ள்

திரைகடல் தாண்டி ... திரவியம் தேட பிரிந்து ...
ஆருயிர் அம்மா பாசம் இழந்தாய் மகனே!

காதல் கொண்டு காணாமல் ஓட.... காலமெல்லாம் .....
அன்புத் தந்தை உறவை இழந்தாய் மகளே!

காசு பணம் தேடி....தேசம்தாண்டி ஓடி.... பாசம் கண்ட பல உறவுகளை பிரிந்தாய் மனமே!

மது போதையிலே புத்தி கெட்டு ..
புகழும் கெட்டு,...
மாசு அற்ற மனைவியை இழந்தாய் கணவா!

கர்வம் கொண்டு .... கண்டபடி பேசி.... சீற்றம்கொண்டு கண் கண்ட ...... கணவன் துணையை இழந்தாய் மனையே!

பெருமையை பார்த்து குழந்தையை.... விடுதியில் சேர்த்து.....
அருமை மழலை ஆசை பேச்சை இழந்தாய் பெற்றவரே!

தந்தை நிலத்தை பங்காய் பிரிக்க.... நல்ல தம்பியின் .....
தரத்தை இழந்தாய் அண்ணா!

தாரத்தின் பேச்சில் தவறாய் உணர்ந்து பகையில் ......
அண்ணன் பாசத்தை இழந்தாய் தம்பி!

மதியா எண்ணம் மனதினில் குழப்பி .... மானம் காக்கும் .....
மாமன் உறவை இழந்தாய் மச்சி!

கோபம் கொண்டு நற்குணம் இழந்து.... தாயாய் வந்த .....
மாமியின் மதிப்பை இழந்தாய் மருமகளே!

ஆசையை அளந்து அன்பாய் பழக
பாசமும் உறவும் பகையே இல்லை!!!
உறவை காத்து..உணர்வை மதிப்போம்!!

பிரியமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (19-Jun-15, 6:59 pm)
சேர்த்தது : அசுபா
Tanglish : uravukal
பார்வை : 126

மேலே