சிற்பியின் மகள்

சி ற் பி யி ன் ம க ள்

சேலை கட்டி சாலையோரம் சோலை ஒன்று நின்றாள்!!!

பொட்டு வைத்த வட்டநிலா அவள் முகத்தை கண்டேன் ... அதிலே போதை கொள்ளும் பாவையவள் பகல் நிலவாய் கண்டேன் !!

தென்றலிலே தவழுகின்ற கருங்குழலை கண்டேன் ... அதிலே வண்ண தோகையுடன் நடனமிடும் மயிலைக் கண்டேன்!!

வெள்ளி கிண்ணமது கண்ணம் அதை காணக் கண்டேன் ... அதிலே மனம் கொள்ளை கொள்ளும் பட்டுமஞ்சம் தவழக்கண்டேன்!!

தேன் சிந்தும் செவ்விதழாய் உதட்டை கண்டேன் ... அதிலே வார்தையில்லா காதல் கொள்ளும் கவிதையை படித்தேன்!!

கண்கள் அவள் கயல்விழியை காணக்கண்டேன் ... அதிலே காமம் கொள்ளும் குளிர்புயலாய் வீசக்கண்டேன்!!

குயில் கூவும் ஓசை அவள் குரலை கேட்டேன் ... அதில் இனிய நாதமெனும் கீதமதை பாடக் கேட்டேன்!!

கொடியிடையாள் இளமெல்லிடையை அங்கே கண்டேன் ... அதில் கோலமயில் ஒயிலோடு நடனம் கண்டேன்!!

காதலோடு உனைகொள்ள பெண் கேக்க ...... அங்கே உன் தந்தையவன் உனைவடித்த சிற்பியானான்!!!

காதல் கண்ட தேவதையே சிலையாய் போக ..... தொலைந்ததடி என் காதல் கடல் அலையை போல!!!

கலைந்து போன என் கனவில்... உறைந்து நின்ற உன் கால் தடங்கள்... பதிவினையே நினைவாய் கண்டேன் !!!!

பிரியமுடன்
அசுபா...

எழுதியவர் : அசுபா (19-Jun-15, 7:06 pm)
சேர்த்தது : அசுபா
Tanglish : sirpiyin magal
பார்வை : 242

மேலே