என் பேனை திறந்த போது

இருட்டறையில் புழுதி
படிந்து மூடியே
மூர்ச்சை இழக்கிறது
பேனை.......

மோட்சப் பயணம்
நோக்கி, முட்டிமோதி
விருட்சமாகும் முயற்சியில்
தீவிரமாய்......

பேனையின் விசும்பலில்
உள்ளம் துடித்தேன்.
கண்ணீர்த் துடைத்துக்
கையில் எடுத்தேன்.........

என் பேனை திறந்த
போது, முனைக்குள்
மின்சார தாக்கம்..
புழுதிக்குள் லட்சம் பூக்கள்........

விண்மீன்களால் ஓர்
மாலை....
நிலவுக்குள் எனக்கான
சாம்ராஜ்யம்.....

மேகத்தை மெத்தையாக்கி
மின்னலில் கயிறு திரித்து
வானவில்லை ஊஞ்சல்
கட்டிக் கொண்டேன்.....

பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சி,
தவழ்ந்து வரும் பூங்காற்று,
வசப்படுத்தினேன்
அத்தனையும்.......

ஊண் இன்றி மாயும்
மாந்தர்க்காய், தீண்டாமையால்
ஏங்கும் ஏழைக்காய்,
பேனையால் போர் செய்தேன்..........

துரோகிகளையும் ,எதிரிகளையும்
துர்க்குணங்களையும்
பேனையால் சுட்டு
வீழ்த்தினேன்.............

படைத்தவன் புகழ்
ஓங்க, என் பேனை
கொண்டு ஓர்
உலகம் செய்தேன்.........

பேனை பேசிய போது
உலகெங்கும்
வெள்ளைப் புறாக்கள்
சிகரத்தில் பறந்தன........

ஒரு இரவில் பஞ்சவர்ணக்
கனவுகள் பல
வானத்தில் நூறு
நிலாக்கள் வரிசையில்..........

பகலவனும் முழுமதியும்
கதைப்
பேசிக்கொண்டன
என் பேனையால்

சூறாவளிக்கும்
சுனாமிக்கும்
விலங்கிட்டு
அடிமையாக்கினேன்.......

என் பேனை திறந்த
போது.. முடியாத
எல்லாம் முடிந்தது
என்னால்..............

-ருஷானா-

எழுதியவர் : (20-Jun-15, 5:27 am)
சேர்த்தது : ருஷானா
பார்வை : 100

மேலே