குமுறும் குழந்தைத் தொழிலாளி

********************************************
பாரமாகப் பிறந்திட்டேனா பூமிதனில்
--பாரத்தை சுமக்கின்றேன் நானும் !
பாடசாலை துறந்திடும் நிலையெனக்கு
--பாடங்களை அறிந்திடா நானும் !
பாரினில் எனைப்போல் பலருண்டு
--பாவமென செய்தோம் நாங்கள் !
பார்வையில் படலையா நெஞ்சங்களே
--பாதையில் செல்வோரே கூறுங்கள் !
பாரத்தை இறக்கிட்ட தாயைநான்
--பார்க்கலியே புவியில் இன்னும் !
பாதிவயிறும் நிறையல ஒருவேளை
--பாதிநாளும் பட்டினியே நானும் !
பாசமிலா தந்தையும் எனக்குண்டு
--பாவியென சொல்லவும் மனமில்லே !
பாதையறியா போதையில் உள்ளாரே
--பாவிமகள் என்றே ஒதுக்கிட்டாரே !
பார்த்திடும் உள்ளங்களே உலகிலே
--பாராளும் அரசுகளே கேளுங்கள் !
பாதை ஒன்றுதான் வகுத்திடுங்கள்
--பாரபட்சம் பாராமல் காத்திடுங்கள் !
பார்புகழ வாழ்ந்திட எண்ணமில்லை
--பாராமுகமாய் இருந்திட வேண்டாம் !
பாரினில் உள்ளவரை பசியின்றிவாழ
--பாவமறியா எனக்கும் உதவிடுங்கள் !
******************************************************
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Jun-15, 7:44 am)
பார்வை : 95

மேலே