வாழ்க நித்திலம் உள்ள வரை - இரு விகற்ப நேரிசை வெண்பா

ஈரோடு, பள்ளிபாளையத்தின் பிரபல மருத்துவர், டாக்டர் தமிழ்செல்வி மாசிலாமணியும், அவரது மகன் நித்தினும் இமயமலையேற்றத்தில் பங்கு கொண்டு திரும்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவி வெற்றியொடு
துள்ளி வருகின்ற தூண்போன்ற – பிள்ளையவன்
நித்தினும், தாயார் தமிழ்ச்செல்வி யும்வாழ்க
நித்திலம் உள்ள வரை!