நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழக் கற்றது நன்று - செ மணி
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடையின் ஓரம் ஓடிய
பாதங்கள்..
என் செவியோரம் உன்னிதழ் கூவிய கீதங்கள்..
உன் தோள் சாய்தலில் கரைந்த என்
பாரங்கள்..
இதையெல்லாம் எண்ணி
கவி பேசும் என் காதல்
நேரங்கள்...
மெல்லமாக பூத்த என் காதல்
உன்னிடம் சொல்லாமலே
உதிர்ந்துவிட்டது..
எனது மெளன மொழிகளை
உனது இரு விழிகள்
புரிந்து கொள்ளவில்லையோ..?
எனது காதல் கரைத்த
மூச்சுக் காற்று உன்னிடம்
பேசிச் செல்லவில்லையோ..?
இனி நான் என்ன செய்ய முடியும்
உன் திருமண விழாவில்
வடக்கே கிடக்கும் மூலை
நாற்காலியில் காலியாக
தவிக்கின்றேன்..
முப்பது வருடம் கழித்து
இறந்து போன இதயத்துடன்
இடம் பிடித்து இருக்கின்றேன்
அதே மூலை நாற்காலியில்
உன் மூத்த மகள் திருமண
விழாவில்..
காலம் கரைந்தும் என்
காதல் கரையாக் காதலே
"நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று"...
செ.மணி