தாய்க்கும் தலை குனிவு

தங்கம் விலை ஏற ஏற
தனக்கான கர்ப்பத்தை
தாயானவள் பரிசோதிக்கிறாள்
தனக்கு பெண் குழந்தை பிறந்து விடுமோ?
தான் பெண் என்பதையும் மறந்து
தலை குனிந்து கொள்கிறேன் ஆண் நான்.




எழுதியவர் : . ' .கவி (12-May-11, 4:26 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 456

மேலே