சொல்லாமல் சுமப்பது
நீ அழகுதான்
உன்னை விட......
என் காதல்
மிக...........மிக
அழகானது.
***
எண் திசைகளிலும்
நீதான் தெரிகிறாய்...............!
தாயின் பாரம்
பத்து மாதம் தான்.
நானோ உன்னை
என் ஆயுள் முழுவதும்
என் நினைவுகளில்
காதல் சிசுவாக......
சுமக்கிறேன்..............!!
***
இப்படி
என் ஆதங்கத்தை
எப்படி உன்னிடம்-நான்
கூற........
ஆதற்காக உன்னை
அபகரித்துப்போக-நான்
தயாறில்லை.
***
எங்காதல் தோற்றால்-அது
எனக்கு இழப்பு.
என்காதல் ஜெயித்தால்-அது
உனக்கு இழப்பு.
காதலை உன்னிடம் கூறி
நமக்குள் இடைவெளி
வருவதினை விட-அதை
உன்னிடம் சொல்லாமல்
வாசகமாக........
சுமக்கின்றேன்.