இன்டர்நெட் வரும்ம்ம்ஆனா வராது

புறாவைத் தூதனுப்பி
மடலைத் தபாலனுப்பி
ட்ரங் கால் புக் செய்து
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதம்மா..!

இன்றோ,
என் வேகத்திற்கு இணை ஏதுமில்லை
என்று மின்னலாய் வந்துவிட்டது
"இன்டர்நெட்" என்னும் இணையம்...!

மேஜையிலிருந்து மடியிறங்கி
மடியிலிருந்து கைக்குள்
புகுந்துகொண்டது இணைய உலகம்..!

வெளிநாட்டு ஆடை ஆபரணங்கள் முதல்
திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி வரை
ஆன்லைன் ஆர்டர் செய்ய வந்துவிட்டன
ஆயிரம் ஆயிரம் ஆப்ஸ்கள்..!

100 SMSஐ காலை மாலை என்று
சிக்கனமாய் செலவளித்த நாம்
வாட்சப் வரப்பிரசாதத்தால்
Hmm…K…Then....என்று
நிமிடத்திற்கு 100 தட்டுகின்றோம்..!

எந்த Pack போட்டால் அதிகமாய்ப்
பேசி மகிழலாம் என்பது மாறி
Viber Call, Whatsaap Call, Facebook Call,
என்று இணைய கால் வந்து
எல்லையில்லா இன்பம் தருகின்றது..!

நாளிதள்களிலும் செய்திச் சேனல்களிலும்
படித்து கேட்டுத் தெரிந்தன போய்,
உலக சங்கதிகள் அனைத்தும்
சுடச்சுட நம் சுட்டு விரலுக்கே வந்துவிட்டன
“FACEBOOK (FB)” என்னும் “BESTFRIEND (BF)” ஆல்..!

தெரிந்தோர் தெரியாதோர்
சொந்தம் பந்தம்
அண்டை அயலார்
என அனைவரையும் இணைத்தது
நம் இணைய நண்பன்...!

வளி ஒளி நீரைப் போன்று,
வான்வெளி இருக்கும் அலைக்கற்றைகளும்
மாந்தர் அனைவருக்கும் சொந்தமே...!
இந்நாளின் இன்றியமையா இணையத்தை
இலவசமாய் இனி வழங்கிடுங்கள் நியாயமாரே..!

இணைய பலன்கள் ஒவ்வொன்றிக்கும்
இனி கூடுதல் கட்டணம் வசூலித்தால்,
நம் கையில் மொபைல் இருக்கும்..
அதில் எண்ணற்ற வசதிகள் இருக்கும்..
ஆனால் இனி,
"இன்டர்நெட் வரும்ம்ம்...ஆனா வராது"
#NETNEUTRALITY

பின் குறிப்பு : இக்கவி தற்கால நடையில் எழுதப்பட்டுள்ளது...தூய தமிழ் இடம்பெறாததைப் பொறுத்தருள வேண்டுகின்றேன் எழுத்துலக தமிழ் நண்பர்களே.... :-)
INTERNET - இணையம்
FACEBOOK - முகநூல்
TRUNK CALL - நெடுந்தொலைப் பேச்சு
APPS - செயலிகள்
SMS - குறுந்தகவல்
BEST FRIEND - உற்ற நண்பன்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (21-Jun-15, 9:13 pm)
பார்வை : 956

மேலே