அழைப்பு

மயான அமைதியாய்
உறங்கிக் கொண்டிருந்தது
உலகம்.............

அரவம் காட்டாமல்
நான் எழுந்து உன்னுடன்
ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன்..........

அந்த நொடி முதல்
உன் நினைவொன்றே
எனக்கு ஒட்சிசனாய்.............

நா வரண்டும்
பசி எடுத்தும்
உடல் துவண்டும்..........

உள்ளம் மாறவில்லை
ஒப்பந்தம்
மீறவில்லை...............

உலக இன்பங்கள் கை நீட்டி
அழைத்தும், விழிகள்
மயங்கவில்லை.........

குறுக்கு வழிகள் கோடியிருந்தும்
என் பாதங்கள்
தடம் மாறவில்லை.........

சிதறிடும் என்
சிந்தனைகளின் கேடயமாய்
உன்னுடனான என் ஒப்பந்தம்..........

உன் திருநாமங்ளே
மொழியாய், உன்
வார்த்தைகளே இசையாய்...........

உன்னை துதிப்பதொன்றே
தொழிலாய், உன் அழைப்புக்காய்
காத்திருந்தேன்.............

நீ எனக்கு தருவதாய்
வாக்களித்த, நிரந்தர சுவன
இன்பங்களுக்கு முன்னால்........

எனக்கு இந்த உலக
சிற்றின்பங்கள் ஒன்றும்
பெரிதல்ல.............

-ருஷானா-

எழுதியவர் : ருஷானா (21-Jun-15, 8:32 pm)
Tanglish : azhaippu
பார்வை : 90

மேலே