என் அப்பா

மனைவி கருவுற்ற போது அவர்
கண்டது மகிழ்ச்சியின் உச்சம்

என் வளர்ச்சி பரிமாணம் அவருக்கு
வாரிசு தைரியத்தை தந்தது

மண்ணில் பிறந்து நான் அவருக்கு
தந்தை அந்தஸ்தை கொடுத்தேன்

என் கை பிடித்து அன்று என்னுடன்
அவரும் நடை பழகினார்

என் சுட்டி சேட்டைகளை இன்னும்
ரசிப்பதில் என்ன பெருமை அவருக்கு

இன்னும் அறிவுக்கு முதல் எழுத்தை
அறிமுகம் செய்து வைத்தவர்

அவர் தோள்களுக்கு நான் என்றும்
சுமை அல்ல ! சுகம்தான் !!

தளராத அவரின் உழைப்பு அன்று
என் எதிர்காலம் எண்ணி மட்டுமே

அவர் கற்று தந்தது மந்திரம் அல்ல
வாழ்கையின் பாதைகளை காட்டி

அப்பா என்றால் அன்பு என்பது
நான் அவரிடம் கண்ட உண்மை

எனக்காக மட்டுமே மனது கனத்தது
நான் சிகரம் தொட வேண்டி

உயர்ந்த நிலையில் நான் இன்று
பாசம் கலங்கிய விழிகளுடன்

வளைந்த தேகமும் ! வளையாத பாசமும் !!

அப்பா !

எனக்கு ஒரு பிதா மகன் !

கவிஞர் .இறைநேசன்.

எழுதியவர் : கவிஞர் .இறைநேசன். (23-Jun-15, 5:55 pm)
Tanglish : en appa
பார்வை : 90

மேலே