அழகிய தமிழ் மகள்
செங்கதிரோன் நிறங்கொண்ட
நெற்றியில்
எலுமிச்சை நிற
சந்தனத்தையும்
இளரத்த குங்குமத்தையும்
கலந்தெடுத்து
வெள்ளித் திரையில் பூத்த
திருநீரை பூசி
வெண்திரையில் பூத்த
வெண்தாமரையாய்
இமை திறவா கமலம் போன்ற
கண்களுடைய
பொன் நிறத்தில் பூசிய
கமலக்கதிராய்
பொற்குலத்தில் கண்டெடுத்த
செவ்வல்லியாய்
சந்தனத்தவிடை தடவி நிற்கும்
தங்கமேனியாய்
பரவிக் கிடக்கும்
கூந்தலும்
மயில் தனது இறகை விரித்தாடும்
காட்சியாய்
சிரித்து வரும்
பூஞ்சிரிப்பை
மெய் சிலிர்த்து வரும்
பொன்சிரிப்பாய்
மை பூசி வந்த
கார்குழலில்
வெண்ணிற தேங்காயினை
பிழிந்தெடுத்து வந்த
எண்ணையை மேல்
தடவாமலே
கருங்கூந்தல் மின்னும்
கட்டழகாய்
வான் எனும் புடவையில் பரவிக்கிடக்கும்
நட்சத்திரப் பூக்களை
தொடுத்தெடுத்து வந்த வெள்ளிக்கொலுசை
காலில் சூடி
பொற்குளத்தில் மிதந்து வரும்
செவ்வல்லியாய்
வானவில்லை வளைத்தெடுத்து அதை வாழைக்குறுத்து கரங்களில்
வண்ண வளையலாய் அணிந்து
விண் எனும் கடலில் முத்துகளாய் தொடுத்து வைத்த
மோதிரமாய்
இமை திறவா ரோஜாவை சூடி வந்த பூவை..
மை தீட்டிய விழிகள்
கண் சிமிட்டும் விண்மீன்கள்
அனல் பறக்கும் பார்வை
-அது அல்லி பூவின் கூர்மை
அள்ளி வரும் கூந்தல்
-அது மாம்பூவின் நீந்தல்
பூ மணக்கும் மேனி
- அது பூவசரம் பூ பாணி.
பிரம்மன் எழுதிய கவிதை தாளின் முதல் பக்கம் கடலில் வீழ்ந்தது
வானவில்லின் ஏழு வண்ணம்களாய் இதோ :
மல்லிகை
போல் நன் மனத்தை பெற்று
ரோஜா
போன்று சிவந்த நிறத்தை பெற்று
சூர்யகாந்தி
போன்று எப்பொழுதும் மலர்ந்த முகத்தோடு வலம்வரும் தாரகை
சாமந்தி
போன்று தங்க நிறத்தை பெற்ற மங்கை
தாழம்பூ
போன்று கூர்மையான அறிவைப் பெற்ற பேதை
வெண்திரையில்
பூத்த வெண்தாமரையாய் கோதை
பன்னீர்பூ
போல் வெள்ளை மனம் கொண்ட தமிழ் பாவை ...
அந்த வான்முகில் தலை குனியட்டும் இவள் அழகில் !