தமிழ்
எண்ணம் விதைத்து எதிலும் நிறைந்தாய்!!
வண்ணம் நிறைத்து வாழ்விலும் கலந்ததாய்!!
விண்ணைத் தழுவும் புகழ்பல படைத்தாய்!!
பண்ணுடை புலவர் சிந்தையில் செரிந்தாய் !!
மண்மகன் என்னை ஈன்றவள் ஒருதாய்!!
பண்புடை மொழியே அவளோடு இணைந்தாய்!!
கண்ணுடை யவர்க்கு கலையென தெரிந்தாய்!!
என்னுடை உணர்வில் என்றும் உறைந்தாய்!!
தென்றல் குலவும் பொதிகைச் சாரல்
உன்னுடன் உலவும் உரிமையை கோர
தென்திசை மேவி தனிமணித் தேரில்
உன்னவர் வாசல் உலவிட வருவாய் !!
இன்பத் தமிழே இயலிசை விருந்தே!!
இன்னல் தீர்க்கும் அதிசய மருந்தே!!
என்னுடை பிறப்பு மேன்மை பெறவே!!
என்னுடன் திகழும் உன்னத உறவே!!