தமிழ்

தமிழ் ----!

இனிமையும்
எளிமையும்
ஒருங்கமைந்த
ஒரு இசை !!

தமிழ் ---!

உரிமையும்
உணர்வும்
ஒருங்கமைந்த
ஒரு பழமை !!

தமிழ் ---!

துடிப்பும்
துள்ளலும்
ஒருங்கமைந்த
ஒரு நாட்டியம் !!!

தமிழ் ---!

இளமையும்
இன்பமும்
ஒருங்கமைந்த
ஒரு நாடகம் !!!!!

தமிழ் ----!

இயலும் இசையும்
நாடகமும்
இரண்டறக் கலந்த
தேன் அமுதம் !!!!!!!!

தமிழ்-----!

என் அன்னை என் உயிர் என்றால்
என் தமிழ் என் உயிர் காக்கும்
மூலிகை மருந்து !!!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jun-15, 10:30 am)
Tanglish : thamizh
பார்வை : 212

மேலே