கண்கவர் வண்ணங்கள் - 12310

கரும்பலகையில்
கற்கத் தமிழ் எழுத்துக்கள் - அவை அந்த

காரிருள் வானத்தில்
காணும் விண்மீன்கள்.....என

கனவு வலை விரிப்போம்
கவிதைத் தென்றல் வசப்படும் .....

காட்சி எல்லாம் வண்ணங்கள் - மனதில்
கவலை இல்லா எண்ணங்கள் என

களிப்போடு வாழ்ந்து பழகுங்கள் - வாழ்க்கை
சலிப்போடு நகர்வதற்கு இல்லையே.....!!

எழுதியவர் : ஹரி (26-Jun-15, 11:06 pm)
பார்வை : 97

மேலே