விளம்பரம்

நான் மறுபடி கவிதை
எழுதப் போகிறேனென்று விளம்பரப் படுத்தி
கையில் பேனாவோடு
காலாற நடந்தேன் .

மானொன்று
தாவிக் குதித்து வந்து
என்னை எழுதாதே என்றது .

பெரிதாக இருக்கட்டுமென்று
புறமுதுகு காட்டி நின்ற
பெரிதொரு மலையை எழுதப்போனேன்
புறம்திரும்பி போய்விடு என்றது

எல்லையிலே போரிட்டு
இருகாலும் இழந்து நின்ற
ராணுவவீரனை பாடப் போனேன்
வேண்டாம் விளம்பரம் என்று சொன்னார்.

புல்லைப் பாடப் போனேன்
புல் மேயும் ஆவைப் பாடப் போனேன்
நெல்லைப் பாடப் போனேன்
நெல் செய்யும் நல்லவனைப் பாடப் போனேன்

எல்லாமும் எல்லோரும்
வேண்டாமென்று சொல்லக்கேட்டு
சோர்ந்து நான் போயிருந்தேன்

நல்லாவே வெள்ளைத்துணி உடுத்திவந்த
-நேற்றைய சாராய வியாபாரி
இன்றைய மந்திரி அவராம்-
என்னண்டை வந்து என்னை பாடென்றார்

எதிரிலிருந்த சிறுகல்லெடுத்து
என் பேனாவை
அங்குலம் அங்குலமாக
உடைத்தெறிந்தேன்.

எழுதியவர் : சுசீந்திரன் . (25-Jun-15, 10:06 pm)
Tanglish : vilamparam
பார்வை : 75

மேலே