எமனின் காதல்

எமன் பூலோகம் வந்து இருந்தால் .....ஒரு பெண்ணை பார்த்து காதல் கொண்டு இருந்தால்
அவளுக்கு அவன் கவி எழுதி இருந்தால் எப்படி இருக்கும் இதோ


*
விண்ணில் இருந்து பூலோகம் வந்தேன்
பூ ஒன்று என் கருவண்டு விழில்
மோத கண்டேன்

*
உயிர் பறிக்க வந்தவன் இதயம்
இழந்து தவிக்கிறேன்
ப்ரெம்ப சுவடி தொலைத்தவன்
உன் திருவடி தேடி அலைகிறேன்

*
எத்தனையோ முகவரிகள் தெரிந்த எனக்கு
உன் முகவரி தேடி அலைந்தேனே
வாசலில் கோலம் இட்டு இருந்தாய்
ஆனால் அது வாசல் இல்லை என் மனம் என்று அறிந்தேன்

*
பாச கையிற் கொண்டு ஊஞ்சல் செய்தேன்
என் வாகனத்தை உனக்காக ரதம் ஆக்கினேன்
என் மந்திரம் எல்லாம் மறந்தே போனனேன்
*

உருவம் மாற நான் நினைத்தாலும்
நீ புருவம் தூக்கி அடக்கி போனாயே
என் கதம் கொண்டு என்னையே மிரட்டி
சென்றாயே

*
உயிர்களை கொன்று தானே வாழ்ந்தேன்
உன்னாலே நேசிக்க ஆரம்பித்தேன்
கவிதைகள் வாசிக்க தொடங்கிவிட்டேன்
*
இப்பொழுது கவலை படுகிறேன்
கண்ணதாசனின் ,வாலியின்
உயிரை எதுக்காக பறித்தேன் என்று

*
எமன் டா எனக்கு மேல எவன் டா
வசனம் பேசியவன்
வாய் மூடி நிக்கிறேன்

*
எல்லோர் விதியும் அறிந்தேன்
என் விதியை இப்பொழுது
உணர்ந்தேன்

*
ஒரு நாள் காலம் மாறியது உன்
உயிரை எடுக்க நேரமும் கூடியது
என் உயிரை ஏற்க்கனவே நீ பார்வையில்
எடுத்ததால் காலத்தின் விதியும் மாறியது

*
காதல் என்றால் காயம் என்பார்கள்
நியாயமே இல்லாமல் சிலர் அதை பிரிப்பார்கள்
அவர்களை முதலில் கொள்வேன் அடி

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (26-Jun-15, 5:12 pm)
Tanglish : emanin kaadhal
பார்வை : 203

மேலே