நான் வேற்றுகிரகவாசி

நான்

முட்டுசுவர் என்னை
விட்டுபலர் பிரிந்தார்கள்

தேடுகிறேன்
தேடுகிறேன்

காரணம் கண்டேன்
கடிகாரம் தொலைத்தேன்

காலசக்கரம் பின் சென்றது
கண்ணோட்டம் முன் சென்றது

பார்வை மாறிவிட்டது
பறவை கூட்டை கடந்துவிட்டது

உணவை அதன் பாணியில்
தேடிக்கொண்டு இருக்கிறது

இனி என்ன யோசனை
தனியான வாழ்வினை

வாழவே ஆசைவைத்தேன்

கூட்டு சேரும் உயிர்கள் இருக்க
நேற்று இருக்கும் உயிர்கள் இறக்க

மாறுகிறது வாழ்வு
போட்டிபோடுகிறது சாவு

பறக்கும் வாகனங்கள் இங்கே
நடக்கும் உயிர்கள் எங்கே

தட்டி கேட்டாலோ
புத்தி சொன்னாலோ

நான் வேற்றுகிரகவாசி

கூடி கைதட்டிநாளோ
தேடி தவறு செய்தாலோ

நான் புத்திசாலி

இணையத்தில் நண்பர்கள் பலர்
துன்பத்தில் கைகொடுப்பவர்கள் எவர்

காலம் மாறி விட்டது
பறவை கூட்டை கடந்து விட்டது

பறக்க தெரிந்த எங்களுக்கு
மறக்க தெரிந்தும் விட்டது

வெயில் காலம் என்றால் மனதின் ஈரம் குறைகிறது

குளிர் காலம் என்றால் மனதின் ஈரம் உறைந்துவிடுகிறது

நாங்கள் பறவைகள்

காலத்திற்கு ஏற்ப மாற்றிகொள்வோம்
நேரத்திற்கு ஏற்ப தூற்றிகொள்வோம்

பறவைகள் கூட்டமாக வீடு செல்கிறது
நாங்கள் கூட்டமாக வீடு செல்கிறோம்

பறவைகள் இரையை தனியாக தேட
மனிதர்கள் இரையை கடையாக தேட

ஓடுகிறது வாழ்க்கை
கரைகிறது இளமை

நகர்கிறது உலகம்
தேடுகிறது இன்பம்

பிரிந்தவர்கள் ஒன்றாக
ஏய்ப்பவர்கள் நன்றாக

இருக்க வேண்டுகிறேன்

நான் மாறாத வேற்றுகிரகவாசி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (26-Jun-15, 7:20 pm)
பார்வை : 114

மேலே