ஆஸம் அம்மணி

பாதி ஆயுச பியூட்டி பார்லருல செலவளிச்சுட்டு
செவத்துல அடிக்கற எல்லா பெயிண்டையும்
மூஞ்சியில அப்பிக்கிட்டு,
அங்கங்க பேஷன்'ல கிளிஞ்சு போன
பிராண்ட்டட் கர்சீப்'அ சுத்திக்கிட்டு

ஊர்லயே ஒசத்தியான நகக்கட உள்ளார
ஒய்யாரமா நொளஞ்சு, கும்மிடு போடும் மேனேஜர
அலட்சியமா பாத்துட்டு
கலர் கலரா இருக்கற கடன் அட்டையில ஒன்ன தேச்சுட்டு போச்சு
அந்த ஆஸம் அம்மணி!

தோள ஒரசர நீள வைரத்தொங்கட்டான மாட்டிக்கிட்டு
''ஆஹ்! திஸ் ஒன்? மை ஹப்பி சர்ப்ரைஸ்ட் மி பார் அவர் அனிவேர்சரி யார்ர்!'' னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச அந்த வெக்கங்கெட்ட ''எம்பவர்டு'' லேடி,
தன்னோட ஏ. டி. எம் புருசனுக்கு
தபால்'ல டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டு
''பீலிங் லவ்டு''னு ஸ்டேடஸ் போடுது, காத போட்டோ புடிச்சு!

வெறுப்பாகி அப்டியே கெளம்பி , ட்ரெயின புடிச்சேன்
சன்னல் எனக்கோசரமே காத்திருந்தாப்போல! சாஞ்சுக்கிட்டேன்...
''எத எடுத்தாலும் பத்து ரூவா''னு, டிசைன் டிசைன்'ஆ கம்மலு, வளவி, கிளிப்புங்க, பிளாட்பாரக் கடையில-
''வாய்ங்க்க செவகாமி! ஓட்டல்ல சாப்டது போக மிச்சங் காசு கொஞ்சம் இருக்குது, பரவால்ல வாய்ங்க்க!''-
வாஞ்சையோட சொன்ன வீட்டுக்காரர பெருமையா பாத்து
''இல்ல நீங்க மொதல்ல புது செருப்பு வாய்ங்குங்க!
எனக்கு தான் ஊர்த் திருவிளாவுல வாங்கியாச்சே!''னு
அம்புட்டு அன்போட சொன்ன அந்த சிவகாமி
எனக்கு சுந்தரியா தெரியுதுங்க!

எழுதியவர் : மதுமதி.H (26-Jun-15, 9:49 pm)
பார்வை : 75

மேலே