நான் உனக்கு பாரமா
யார் தந்த சாபமோ ஏன் இந்த கோவமோ
நான் உனக்கு பாரமோ
வாழ்வு எனக்கு தூரமோ
தாயாக இருப்பேன் என்றாய்
மனம்போல நடப்பேன் என்றாய்
படி ஏறும் முன்னாடி
பாதத்தில் முள்ளை வைத்தாய்
வழி கிடைக்கும் நேரம்
விடைகேட்டு நிற்கிறாயே
நிழல் போன்றது காதல்
நிஜமானது மணவாழ்க்கை
மனசுக்குபிடிக்காத
மணவாழ்க்கை இனிக்காதம்மா
மறுவாழ்வு கிடைச்சாலும் நிலைக்காதம்மா
நீர் ஒட நிலம் மறுக்குமா
நிஜம் இல்லாத வார்த்தை நிலைக்குமா
விலகுவது ரெம்பச்சுலபம்
பின்வருவதேல்லாம் பெரும் துயரம்
சுட்ட கல் இல்லையோ கட்டும் முன்னே கறையுதம்மா
காலம் எனக்கில்லையோ இது கனவில் கண்ட வீடோ
எனை காதல் கொண்டது தீயோ
கருகிப்போனது வேதம் கலங்கடித்தது உன் வாதம்
அறியாமல் கேட்டாயோ முறிவை அறிந்தும் தந்தேனோ
பிரிவை இருந்தும் மறப்பேனோ மறந்தும் நினைக்கதே

