பரவாதனை
மிகவும் சிறியதான உணவகத்தில்
விலைப் பட்டியல் பார்த்து
'ஒரு சிங்கில் பூரி' என்கிறான் ஒருவன்.
அவனுக்கு 'ஒரு பூரி செட்டும் ஒரு தோசையும்' என்கிறான்
அவன் நண்பன்.
இமை விலகா அவன் விழிநீரின் ஒசைகள்
என் காதுகளில் மட்டும்.
நிகழ்வு பற்றி எதுவும் அறியாமல்
விரைந்து செல்கிறது 'ஆடி' காரொன்று.
*பரவாதனை - பரவாசனை - எல்லாம் சக்திமயமாக உணர்தல் - திருமந்திரம் 1174