மின்சாரம் கிடைக்கும் எப்போது
மின்சாரம் கிடைக்கும் எப்போது....
இருட்டுல நீ வாழ பழகு
வெளிச்சம் எல்லாம் எதுக்கு டா ............
கருவறையில் இருந்தப்போ
கரண்டு இல்லை உனக்கு டா ...........
பெட்ட்ருமாஸ் லைட் கொளுத்து
பங்க்சன் மூடு கிடைக்கும் டா .........
மெழுகு வர்த்தி ஏத்தி வை
பர்த்டே போல இருக்குன் டா ........
காலேஜ்க்கு கட் அடிச்சிட்டு
சந்தோசமா சிரிக்குற....
கரண்ட் மட்டும் கட் அடிச்சா
கண்டபடி குதிக்குற......
பேக்டரியா இழுத்து மூடு
டெய்லி உனக்கு லீவு டா ........
போரடிச்ச தெறந்திருக்கு
டாச்மார்க்கு ஓடுடா..........
பேனை தூக்கி போட்டுட்டு
பேரிச்சம் பழம் வாங்குடா
வொய்ப்பு சீரியல் பாக்கலைனா
டைமுக்கு கிடைக்கும் சோறு டா.......
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த
மின்சாரம் மிச்சம்டா ....
கரண்ட்டு பில்லு கட்ட தேவையில்ல உனக்கு
உடம்பு பூரா மச்சம்டா ................
ஆதிவாசி மனுஷனோட
வாழ்கை இப்போ புரியுதா ........
கல்லறைக்கு போன பின்னும்,
கரங்கொண்டு இல்லை புரியுதா...........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
