வேலைக்கு போகும் விட்டில் பூச்சி

விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்றா முளைக்கும்

முளைத்ததே ! ஆம்

நான் பெற்றது என்னமோ அறிவியலில் பட்டம்
செய்யும் தொழிலோ
தரவு பதிவேற்றம் (Data entry )

நிச்சயம் நானும்
லட்சியம் வெல்வேன் - என
சத்தியம் செய்துதான் - தினமும்
என்னை சமாதானபடுத்தி கொள்கிறேன் .

பத்தாண்டுகளுக்கு முன்
நானும் இளம்பட்டதாரித்தான்
படித்த கல்விக்கு வேலைக்கிடைபதற்க்குள்
பழமையாகி விட்டேன்
ஆனால்
பல்கலை கழகங்கள் மட்டுமே புதிதாக

ஆயிரம் கணக்கில் ஊதியம்தான்
ஆனாலும் அடிமனதில் ஒரு அறிவியல்தேடல்

காதலித்த பெண்ணோடு வாழாமல்
கல்யாணம் செய்து வாழ்வதுபோல்

கிடைத்த வேலையை காதலிக்க நினைத்தால்
நடிக்க தெரியாமல் நான்
காலத்தை தள்ளுகிறேன்

வெளிச்சத்தை தேடிய விட்டில் பூச்சி
விளக்கில் வந்து மாட்டி கொண்டதுபோல்

எழுதியவர் : மதனா (28-Jun-15, 6:31 pm)
பார்வை : 147

மேலே