வாழ்வின் நம்பிக்கை 555
நம்பிக்கை...
மழைத்துளிகளை மாலையாய்
கட்ட முடியும்...
கடலின் அலைகளிடம்
கடிதம் எழுத சொல்ல முடியும்...
நட்சத்திரம் எனும்
காசு பொருக்கி...
நிலவு என்னும்
உண்டியலில் நிரப்ப முடியும்...
ஆகாயம் பூமி அடிபணிய
செய்ய முடியும்...
நம்பிக்கை நதி மட்டும் நம்மில்
வற்றாமல் இருந்தால்...
இந்த உலகமும்
உன் வசப்படும்...
எதையும் நம்பிக்கையோடு
செய் துணிந்து.....