அதுவே நட்பாகும்…
இருவேறு உயிர்களின்...
மன உணர்வுகளின்
சங்கமத்தில்...
ஆம்...
உதடு சொல்லும் காற்றை
நிறுத்தி விளையாடும் விரல்
இசைக்கும்
புல்லாங்குழல் இசை போல்...
உதட்டின் உச்சரிப்பும்
உள்ளத்தின் உச்சரிப்பும் ஒன்றானால்
அதுவே நட்பாகும்…

