வியர்வைக்கும் கண்ணீருக்கும் போட்டி
...................................................................................................................................................................................................
வியர்வைக்கும் கண்ணீருக்கும்
போட்டி - யார் பெரியவர் என்று..
நெற்றியை ஈரமாக்கி
புழுதிக் கோலம் போட்டு
வெற்றியை ஈட்டித் தந்த
வியர்வை கேட்டது,
“அய்யா கூலி தாங்க”
ஊஹூம்.. கிடைக்கவில்லை..
பசியோடு உறங்கத் தெம்பின்றி
பாட்டாளி கண்ணீர் கேட்டது
“அய்யா கூலி தாங்க”
அப்போதும் கிடைக்கவில்லை..
அப்பா என்றே வந்தாள்-
பணியாளின் பாசமகள்..
பதினெட்டு வயதுப் பருவம்...!
பார்த்தவர் மயங்கும் உருவம்...!
பட்டுச் சட்டை ஆண்டைக்கு சட்டென்று
எட்டிப் பார்த்தது ஜொள்...
“கூலியா? நாலு நாளைக்கு சேர்த்து வாங்கிக்க.... ”
பாட்டாளியின் உப்புநீரை
ஜெயித்தது
பணக்காரனின் எச்சில்.. ! ! !
............................................................................................................................................................................................