எனக்கொரு பாதை
கவ்விய இருளை தனக்குள் ஏற்று
செவ்விய ஒளிசெய் சுடரவன் கீற்று
வாடை வீசும் வசந்த காலம்
மேடை போடும் பூக்களின் வாசம்
இனம் காண விழைந்த நானும்
மனம் போன போக்கில் வாட
தெள்ளிய பாடல் தெளிவுற கேட்டு
துள்ளிய நெஞ்சை துயரிடை மீட்டு
அல்லும் பகலும் சுழலும் உலகில்
சொல்லும் பொருளும் நிழலில் உலர
வாட்டம் கொண்டு பிழைப்பு கென்று
கூட்டம் ஒன்று ஒடக்கண்டு நின்று
துயரம் கண்டவர் செவிகள் தோறும்
மதுரத் தமிழை பொழிவது போலும்
தொண்டு செய்து வாழ்வாய் என்று
கண்டு சொன்னாள் என்தமிழ் அன்னை !!