தமிழை ஏன் நீ மறந்தாயோ

தமிழனே!

உன் மொழி தமிழென்பதை நீ ஏன் மறந்தாய்?

பெற்றவள் வழி வந்த மொழி சிறுமையானதா
பிறர் பயிற்றுவித்து கற்ற மொழி பெருமை வாய்ந்ததா

தமிழெனும் கடலின் ஆழம் கண்டு பயந்து
அரை அடி நில தண்ணீரில் மூழ்கி போனாயோ?

கண் பார்வை குறையும் போதே கண்ணாடியை நாடும் கண்கள்
தமிழில் வார்த்தை குறைந்ததென்றா ஆங்கிலத்தை நாடினாய்

தமிழ் தமிழ் என்று உயிர் விட சொல்லவில்லை
ஆங்கிலேயநிடத்தில் தமிழ் பேசுவதில் அர்த்தமில்லை

உடன் பிறப்பிடத்தும் உறவிடதும் ஆங்கிலம் கலந்து பேசாதே
சர்க்கரை பொங்கலில் ஒரு சிட்டிகை உப்பு சுவை என்றும் கூட்டாதே

தாய் தந்தை இன்றி பிறப்பெடுத்தவன் கடவுள் என்றால்
நம் தாய் மொழி தமிழும் ஒரு கடவுள் தான்....!!!

அந்த கடவுளை விடுத்து செல்வதில் பெருமை நீயும் கொள்ளாதே
வேலை மட்டும் ஆங்கிலம் பேசி
வாழும் மட்டும் தமிழினை நேசி .....!!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (2-Jul-15, 8:42 pm)
பார்வை : 493

மேலே