இது போதும் எனக்கு

தென்னை தென்றலை
சாமரம் வீசியதோ!

பனைகளும் சிலுசிலுவென்று
ஈர காற்றை குடிலுக்குள்அள்ளி வந்ததோ!

மாலை ஒளியில்
மலையும் ஆவாரம்
பூ சூடியதோ!

பாலாறு ஓடும் பாதையோ!
பாதையில் பூக்களின் வாசமோ!

நீளவானம்
நிலவொளி காட்டுதோ!

தேன்
மெழுகாய்
உருகுதோ!


வாடையும்
வனத்திடம்
வசந்தத்தை
பேசியதோ!

சல சலவென்று
அருவியும்
காதோடு
கதை பேசி
சென்றதோ!

பட படவென்று
பறவைகள்
பறந்து
பார் என்று
சொல்கிறதோ!

இராந்தல்
ஒளியில்
உனை பார்த்து
மௌன மொழியில்
கூறினேன்!
"நீயும் நானும்
ஆயுளுக்கும்
ஒன்றாக சேர்ந்து
இவைகளோடு ஒன்றி
இரசித்து வாழ வேண்டும்"
இதை உணர்ந்த
நீ
என் தலையை
வருடுகின்றாய்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Jul-15, 3:39 pm)
Tanglish : ithu pothum enakku
பார்வை : 184

மேலே