நினைவுகள் மறையாது
எங்கள் டாக்டர் பணிக்கர்,
த.ரா.பணிக்கர்,
தரமெல்.ராமகிருஷ்ண பணிக்கர்,
நோயைக் கணிப்பதில் சமர்த்தர்;
ஆய்வுக் கூட சோதனை செய்வார் அவரே,
எங்கள் நோயைத் தீர்ப்பதில் வல்லவர்; நல்லவர்;
கலர் கலரான மருந்தும் கொடுப்பார்,
கனிவான ஆறுதலும் தருவார்;
நோய் பறந்து போகுமே
பீசும் மிகக் குறைவே;
பணிக்கர் டாக்டர் மறைந்தாலும்
அவர் நினைவுகள் மறையாது.
குறிப்பு:
என் தகப்பனாரின் சிறு வயது முதல் எனக்கு 30 வயதாகும் வரை சுமார் 35 ஆண்டுகள் (1974 வரை) எங்களூர் சோழவந்தானில் மருத்துவம் செய்து வந்த புகழ்பெற்ற மருத்துவர் Dr.ராமகிருஷ்ண பணிக்கர் LMP அவர்களின் சிறப்பு பற்றிய நன்றி பாராட்டும் பாடல்.