செல்லாக்காசு

ஒவ்வொரு எட்டாய்
நிழலுண்ணும் தடியின்
மூப்பில்
பட்டினி சுருட்டியிருந்தது
அரைஞாண் கயிறு...
தனது உடற்கட்டில்
ஆறு எட்டாகவும்
அதற்கு மேலும்
தொப்பை விழுங்கியிருக்க ,
வெய்யில் உராயும்
செருப்பின் அனுபவங்களாய்
கிழிந்து தொங்கின
ஒவ்வொருவருக்குமான
அவசரங்கள்...
மேலாடையற்ற காந்தியொருவரின்
வழியில்
ஆட்டுப் பாலின்
தடயங்களின்றிப் புழுதியான
பசியில்
பயணச்சீட்டுக்கள்
சில்லரைச் சத்தங்களின்றி...!

எழுதியவர் : புலமி (4-Jul-15, 10:34 am)
பார்வை : 148

மேலே